Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் வரும் நவ.1ம் தேதி முதல் 5% மதுபானங்களின் விலை உயர்வு

மகாராஷ்டிராவில் வரும் நவ.1ம் தேதி முதல் 5% மதுபானங்களின் விலை உயர்வு

By: vaithegi Mon, 23 Oct 2023 12:42:41 PM

மகாராஷ்டிராவில் வரும் நவ.1ம் தேதி முதல் 5% மதுபானங்களின் விலை உயர்வு


மகாராஷ்டிரா: தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது, மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதற்கு இடையே, உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்க செய்யும் வகையில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை ரூ.500 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் மதுபானங்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.

liquor price in maharashtra ,மகாராஷ்டிரா, மதுபானங்களின் விலை

அதாவது, பார்கள், லவுஞ்ச்கள் மற்றும் கிளப்புகளில் வழங்கப்படும் மதுபானங்கள் விலையை உயர்த்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. பெர்மிட் ரூம் மதுபான சேவைக்கான VAT வரி 5% அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆன்-கவுன்டர் விற்பனையின் விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயர்வு நவ.1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :