Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • GST கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% வரி விதிப்பது

GST கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% வரி விதிப்பது

By: vaithegi Wed, 29 June 2022 2:36:48 PM

GST கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% வரி விதிப்பது

இந்தியா: இந்தியாவில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு நடத்தப்படும் 47வது GST கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நேற்று (ஜூன் 28) துவங்கியது. இக்கூட்டத்தில் பாக்கெட்டில் விற்கப்படும் தயிர், லஸ்ஸி ஆகியவற்றுக்கு 5% GST வரி விதிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு தற்போது GST கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

சண்டிகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 47வது GST கவுன்சில் கூட்டம் நேற்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் பரிந்துரைத்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

yogurt,lassi,gst ,தயிர், லஸ்ஸி,GST

அந்த வகையில் குடியிருப்பு பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய்க்கு குறைவான ஹோட்டல் அறை வாடகை உள்ளிட்ட சில குறிப்பிட்ட சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை ரத்து செய்வது குறித்த பரிந்துரைக்கு முடிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு லேபிள் ஒட்டி விற்கப்படும் தயிர், லஸ்ஸி உள்ளிட்ட குளிர் பானங்கள் மீது 5% GST வரி விதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தவிர GST கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் நடத்தப்படும் சூதாட்டம், குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிப்பது குறித்தும் அரசுக்கு பல மாநில அரசுகள் பரிந்துரை செய்துள்ளன.

Tags :
|
|