Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆப்கானிஸ்தானில் தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் பதிவு

ஆப்கானிஸ்தானில் தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் பதிவு

By: vaithegi Thu, 23 Feb 2023 6:47:22 PM

ஆப்கானிஸ்தானில் தற்போது 5-வது முறையாக நிலநடுக்கம் பதிவு

ஆப்கானிஸ்தான் : 5-வது முறை நிலநடுக்கம் .... ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத் அருகே இன்று காலை 6.07 மணியளவில் 6.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அதன் தொடர்ச்சியாக மீண்டும் 6.25 மணிக்கு 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் ஆப்கானிஸ்தானின் ஃபாயிசாபாத்தில் மீண்டும் 7.37 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 நிலநடுக்கங்கள் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

earthquake,afghanistan ,நிலநடுக்கம் ,ஆப்கானிஸ்தான்

மேலும் 4 நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் எந்த விவரமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது 12.15 மணியளவில் 5-வது முறையாக பைசாபாத்திலிருந்து 287 கிலோ மீட்டர் தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகி வருவது ஆப்கானிஸ்தானை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Tags :