Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

By: vaithegi Sat, 29 Apr 2023 2:42:29 PM

ராமநாதபுரத்தில் வருகிற மே 5ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் : ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கோவில் திருவிழா காரணமாக வருகிற மே 5ம் தேதி அன்று விடுமுறை அளிப்பு .... தமிழகம் முழுவதும் சித்திரை மாதம் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், மிகவும் சிறப்புமிக்க சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் அதிக மக்கள் கலந்து கொள்ளும் திருவிழாக்கள் அன்று மாவட்ட மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அன்றைய தினம் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

local holiday,local holiday ,உள்ளூர் விடுமுறை ,உள்ளூர் விடுமுறை

அந்த வகையில், ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நிகழ்ச்சியில் ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா வருகிற மே 5ம் தேதி அன்று நடைபெறுகிறது.

இதனால் அன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதற்கு பதிலாக மே 20 ம் தேதி (20.05.2023) அன்று பணிநாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :