Advertisement

மதுக்கடைகளுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை

By: vaithegi Wed, 23 Nov 2022 12:44:39 PM

மதுக்கடைகளுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை

திருவண்ணாமலை : தொடர் விடுமுறை .... திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி 10 நாட்களுக்குன் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டிருக்கும்.

இதனை அடுத்து இந்நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற விழா இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

tiruvannamalai,liquor store ,திருவண்ணாமலை ,மதுக்கடை

எனவே இதனையொட்டி, திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கும் டாஸ்மாக் கடை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, நல்லவன்பாளையம் மதுக்கடை மற்றும் திருவண்ணாமலை நகரின் உட்பகுதியில் இயங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுக்கடைகளான திரிசூல், நளா, அஷ்ரேயா ஆகிய பகுதிகளிலும்

மேலும் அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2ம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து மூட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags :