Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாதக் காலம் சஸ்பெண்ட்

போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாதக் காலம் சஸ்பெண்ட்

By: vaithegi Sun, 21 Aug 2022 1:58:12 PM

போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாதக் காலம் சஸ்பெண்ட்

சென்னை: போக்குவரத்து துறையில் வாகன ஓட்டுனர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டது. இவற்றை மக்கள் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய அவ்வப்போது காவல்துறையினர் சோதனைகளை செய்து கொண்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து அவ்வாறு சோதனையில் ஈடுபடும் காவல்துறையினர் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காத நபர்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக புகார்கள் பல போக்குவரத்து காவல்துறையில் பெறப்பட்டது.

traffic police department,drivers. , போக்குவரத்து காவல் துறை,வாகன ஓட்டிகள்.

மேலும், சென்னையில் பதிவு எண் பலகைகள் இல்லாமலும் பழுதடைந்த பதிவு எண் பலகைகளுடனும் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து காவல் துறைக்கு வந்த புகார்களை அடுத்து காவல்துறை அதிரடியாக சிறப்பு சோதனைகளை நடத்தினார்கள்.

எனேவ இதன் மூலம் பலர் மீது வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாதக் காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.

Tags :