Advertisement

தமிழ்நாட்டில் இன்னும் 6 நாட்களுக்கு மழை

By: vaithegi Mon, 02 Oct 2023 10:03:15 AM

தமிழ்நாட்டில் இன்னும்  6 நாட்களுக்கு மழை

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் ... மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நாளை முதல் வருகிற 7ஆம் தேதி வரை; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags :
|