Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்

By: Monisha Sat, 06 June 2020 6:21:11 PM

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி - பொதுமக்கள் அச்சம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். தொடர்ந்து, மராட்டியம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என மீண்டும் படிப்படியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக மொத்தம் 38 பேர் குணமடைந்தனர்.

karur district,coronavirus,public fear,casualty figures ,கரூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பொதுமக்கள் அச்சம்,பாதிப்பு எண்ணிக்கை

இந்தநிலையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியை சேர்ந்த 1½ வயது குழந்தை உள்பட அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கும், தேவர்மலையை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :