Advertisement

இன்று 600 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்

By: vaithegi Fri, 21 July 2023 11:00:13 AM

இன்று 600 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்

சென்னை: வார இறுதி நாளான இன்று பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம் .. சென்னையில் பணியாற்றும் மக்கள் வார இறுதி நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமான ஒன்று.

எனவே அப்போது பேருந்துகளில் மிக அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றும் , நாளையும் சென்னையில் இருந்து தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

special buses,chennai ,சிறப்பு பேருந்துகள் ,சென்னை

அதன்படி கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதனை அடுத்து ஞாயிறு அன்று அந்தந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை,மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களில் இருந்து திரும்ப வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :