Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் இதற்காக தான்

சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் இதற்காக தான்

By: vaithegi Thu, 22 Dec 2022 5:39:14 PM

சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் இதற்காக தான்

சென்னை: சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை மற்றும் பிற முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பாக வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். மேலும் அத்துடன் சென்னை உள்ளிட்ட பெரு பெருநகரங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

அந்த வகையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக சுமார் 600 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டு ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

special buses,chennai , சிறப்பு பேருந்துகள் ,சென்னை

இதனை அடுத்து வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அரசு பேருந்துகளில் மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அத்துடன் பண்டிகையும் இணைந்துள்ளதால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பேருந்துகளில் பயணிப்பர்.

அதனை தொடர்ந்து தற்போது பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் குழந்தைகளுடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். எனவே இதனை கருத்தில் கொண்டு நாளை முதல் 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோன்று டிசம்பர் 24ம் தேதியும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :