Advertisement

இந்தியாவில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 12 Aug 2020 3:13:40 PM

இந்தியாவில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.44 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.05 கோடியைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்த எண்ணிக்கை 22,68,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,infection,death,treatment ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கடந்த 24 மணி நேரத்தில் 56,110 குணமடைந்துள்ளதால் இதுவரை 16,39,599 பேர் குணமடைந்துள்ளனர். இது 70.38 சதவீதமாகும். 834 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும். தற்போது 6,43,948 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும்.

நேற்று மட்டும் 7,33,449 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது

Tags :
|
|