Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 12 Aug 2022 5:55:32 PM

சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும், நாளையும் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதற்கு இடையே நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி விடுமுறை என்பதால், அடுத்தடுத்து 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது.

எனவே இதை முன்னிட்டு சென்னையில் பணியாற்றும் பிற ஊர்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர் மேலும் . அவ்வாறு சென்னையில் பிற ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

special buses,chennai ,சிறப்பு பேருந்துகள்,சென்னை

இதனை தொடர்ந்து அதன்படி இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்,

இதை அடுத்து விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களுக்காக போதுமான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Tags :