Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவிலிருந்து 61.5 சதவீத நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 61.5 சதவீத நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்

By: Karunakaran Wed, 08 July 2020 3:37:16 PM

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 61.5 சதவீத நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் தற்போது இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கடந்த 6 நாட்களாக தினசரி கொரோனா உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் இந்தியாவில் மொத்தம் 742417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20642 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

india,patients recover,discharge,corona virus ,இந்தியா, நோயாளிகள் குணம்,டிஸ்சார்ஜ், கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது. மேலும் இதுவரை 456831 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 61.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடைய 264944 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 217121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு 118558 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 118594 ஆக உள்ள நிலையில், 71116 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|