Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்வர் பினராயி விஜயன்

By: Monisha Sat, 30 May 2020 12:54:12 PM

கேரளாவில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்வர் பினராயி விஜயன்

கேரள முதல்வர் பினராயி விஜயன் கொரோனா தொற்று பரவல் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் நேற்று புதிதாக 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 23 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் இன்று ஒருவருக்கு நோய் பரவியுள்ளது. திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை சிறையில் உள்ள 2 கைதிகளுக்கும், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் இருவருக்கும், ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கும் நேற்று நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பினர்.

இதுவரை கேரளாவில் கொரோனா உறுதி தொற்று செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,150 ஆகும். அவர்களில் தற்போது 577 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக கொரோனா அறிகுறிகளுடன் 231 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேரளாவின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,23, 087 பேர் வீடுகளிலும், 1,080 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

kerala,chief minister pinarayi vijayan,corona infection confirmation,medical services corporation,indian medical research center ,கேரளா,முதல்வர் பினராயி விஜயன்,கொரோனா தொற்று உறுதி,மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன்,இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் மூலம் 620 கோடியே 71 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதில் 227 கோடியே 35 லட்ச ரூபாய் இதுவரை செலவிடப் பட்டுள்ளது. கேரளாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 12,191 தனிமைப் படுக்கைகள் உள்ளன. அவற்றில் இப்போது 1,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் நோய்த் தொற்றுப் பரவலை சமாளிக்கும் விதமாக 1,296 அரசு மருத்துவமனைகளில் 49,702 படுக்கைகளும், 1,369 அவசர சிகிச்சை படுக்கைகளும், 1,045 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர, 866 தனியார் மருத்துவமனைகளில் 81,904 படுக்கைகளும், 6,059 அவசர சிகிச்சைப் படுக்கைகளும், 1,578 வென்டிலேட்டர்களும் உள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின்படி தேவையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
|