Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 62 நாடுகள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 62 நாடுகள் கோரிக்கை

By: Monisha Mon, 18 May 2020 1:55:34 PM

கொரோனா வைரஸ் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த 62 நாடுகள் கோரிக்கை

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 212 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 48 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது.

coronavirus virus,comprehensive investigation,73rd meeting of the world health organization,european union,china ,கொரோனா வைரஸ்,விரிவான விசாரணை,உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டம்,ஐரோப்பிய யூனியன்,சீனா

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாகம், உடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாகவும் பல்வேறு தகவல்கள் வெளி உலகுக்கு வர தொடங்கியுள்ளது. இதற்கு சீனாதான் பொறுப்பு என உலக வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டிவருகின்றன. தொடர்ந்து வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

coronavirus virus,comprehensive investigation,73rd meeting of the world health organization,european union,china ,கொரோனா வைரஸ்,விரிவான விசாரணை,உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டம்,ஐரோப்பிய யூனியன்,சீனா

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டம் இன்று கூட உள்ளது. அக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரி 62 நாடுகள் கோரிக்கை வைக்க உள்ளன. மேலும்,கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்படவும் உள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து கொண்டு வர உள்ள இந்த தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், நியூசிலாந்து, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே இந்த தீர்மானம் விரைவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது

Tags :