Advertisement

தமிழகம் முழுவதும் 62 ஆயிரத்து 112 மாதிரிகள் பரிசோதனை

By: Monisha Fri, 24 July 2020 10:36:05 AM

தமிழகம் முழுவதும் 62 ஆயிரத்து 112 மாதிரிகள் பரிசோதனை

தமிழகத்தில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பலி மற்றும் பரிசோதனை நிலவரம் தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 472 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நோய் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், நோய் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 88 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,testing,samples ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பரிசோதனை,மாதிரிகள்

இதற்கிடையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 60 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 75 ஆயிரத்து 522 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் உச்சபட்சமாக 62 ஆயிரத்து 112 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 57 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :