Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் சிக்கி தவித்த 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

By: Nagaraj Tue, 01 Sept 2020 4:08:51 PM

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 640 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பல இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகள் விமான சேவையை நிறுத்தின. இதனால் கல்வி, வேலை உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் தாயகம் திரும்ப வழியின்றி சிக்கி தவித்தனர். இதையடுத்து அரசு சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து சிறப்பு விமானங்கள் வாயிலாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

overseas,sri lankans,homeland,pcr test ,வெளிநாடுகள், இலங்கையர்கள், தாயகம், பிசிஆர் பரிசோதனை

அந்த வகையில் இன்று கட்டார், குவைட் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 640 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Tags :