Advertisement

டெல்லியில் இன்று மட்டும் 648 பேருக்கு கொரோனா உறுதி

By: vaithegi Sun, 03 July 2022 9:57:57 PM

டெல்லியில்  இன்று மட்டும் 648 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைப்பு சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மட்டும் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 19,37,013 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 5 பேர் இறந்துள்ளனர்.

delhi,corona ,டெல்லி ,கொரோனா

டெல்லியில் இதுவரை மட்டும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,271 ஆக உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று மட்டும் 785 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்கள்.

. அதேசமயம் டெல்லியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,07,474 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தற்போது 3,468 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவகிறது என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவித்துள்ளது.

Tags :
|