Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இதுவரை 67,468 பேர் கொரோனாவால் பாதிப்பு; 866 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் இதுவரை 67,468 பேர் கொரோனாவால் பாதிப்பு; 866 பேர் கொரோனாவுக்கு பலி

By: Monisha Thu, 25 June 2020 10:05:00 AM

தமிழகத்தில் இதுவரை 67,468 பேர் கொரோனாவால் பாதிப்பு; 866 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று 2,865 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் உள் மாநிலத்தில் 2,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிறமாநிலம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த 91 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 29,655 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 2,865 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 64,603லிருந்து 67,468 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோரில் 41,678 பேர் ஆண்கள், 25,770 பெண்கள், 20 பேர் மூன்றாம் பாலினத்தவர் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,influence,treatment,death ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

சென்னையில் நேற்று மட்டும் 1,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,138 லிருந்து 45,814 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவிற்கு இதுவரை 668 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 60 பேர், திருவள்ளுர் 45 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 866-ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையில் 25 பேர், தனியார் மருத்துவமனையில் 8 பேர் கொரோனாவால் பலியாகினர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu,coronavirus,influence,treatment,death ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று 2,424 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339ல் இருந்து 37,763- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 88 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :