Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 6791 பேர் கொரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 6791 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Nagaraj Mon, 29 June 2020 12:03:45 PM

கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவில் 6791 பேர் கொரோனாவால் பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,791 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. ரஷ்யாவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து 3 வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவின் பாதிப்புகளை குறைக்க மாஸ்கோ உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

moscow,corona,vulnerability,curfew,relaxation ,மாஸ்கோ, கொரோனா, பாதிப்பு, ஊரடங்கு விதிமுறை, தளர்வுகள்

இதற்காக அதிபர் புதின் பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதிதாக 6,791 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் ரஷ்யாவின் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,34,437 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,073 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 5,735 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை நோய் பாதிப்புகளில் இருந்து 3,99,087 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது மாஸ்கோ நகரில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|