Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதிதாக 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Fri, 21 Aug 2020 11:05:43 AM

இந்தியாவில் புதிதாக 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தாண்டவம் ஆடுகிறது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.28 கோடியாக அதிகரித்துள்ளது. உலகளவில் நோய் தொற்றுக்கு 7.96 லட்சம் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

india,corona virus,infection,treatment,kills ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 29 லட்சத்து 05 ஆயிரத்து 824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 68 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 983 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,96,665ல் இருந்து 21,58,947 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,92,028 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தியாவில் உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நேற்று வரை 3,34,67,237 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 8,05,985 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.

Tags :
|