Advertisement

உலகம் முழுவதும் 685,088,075 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Wed, 12 Apr 2023 12:48:08 PM

உலகம் முழுவதும் 685,088,075 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியா: சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.50 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 685,088,075 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,838,590 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 657,954,404 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,295,081 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

corona,world , கொரோனா,உலகம்

அந்த வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 106,385,356 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,157,194 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 104,223,424 என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,768,172 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 531,000 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,200,079 என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,853,256 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 165,857 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 39,560,173 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|