Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த 24 மணி நேரத்தில் கனடாவில் கொரோனாவால் 686 பேர் பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் கனடாவில் கொரோனாவால் 686 பேர் பாதிப்பு

By: Nagaraj Tue, 28 July 2020 7:17:20 PM

கடந்த 24 மணி நேரத்தில் கனடாவில் கொரோனாவால் 686 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 686பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாவது:

கனடாவில் ஒரே நாளில் 686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 597ஆக உயர்ந்துள்ளது.

canada,corona,vulnerability,death toll,health sector ,கனடா, கொரோனா, பாதிப்பு, பலி எண்ணிக்கை, சுகாதாரத்துறை

எட்டு ஆயிரத்து 901பேர் இதுவரை பலியாகி உள்ளனர். 5 ஆயிரத்து 836பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 99 ஆயிரத்து 860பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 225பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|