Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா பாதிப்பு

By: Karunakaran Fri, 10 July 2020 09:32:44 AM

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.23 கோடியைத் தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.56 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

maharashtra,coronavirus,corona death,corona prevalence ,மகாராஷ்டிரா, கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,875 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 219 பேர் உயிரிழந்ததால், அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,667 ஆக அதிகரித்துள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களாக தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன.

Tags :