Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Sat, 15 Aug 2020 4:26:05 PM

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக  69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,642 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 015 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஆனாலும், 5 ஆயிரத்து 514 பேர் பலியாகி உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13 பேருக்கும், அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 20 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகள், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 6 பேருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 9 பேருக்கும் என மொத்தம் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,642 ஆக உயர்ந்துள்ளது. 1,194 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 378 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது.

ariyalur district,corona virus,infection,death,treatment ,அரியலூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

Tags :
|