Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது - அனில் தேஷ்முக் தகவல்

மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது - அனில் தேஷ்முக் தகவல்

By: Monisha Fri, 29 May 2020 11:12:07 AM

மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது - அனில் தேஷ்முக் தகவல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் புலம்பெயா்ந்த தொழிலாளர்கள். மகாராஷ்டிராவில் வேலையின்றி தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளர்களை ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இதுவரை மராட்டியத்தில் இருந்து சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-

maharashtra,migrant workers,sharmik special trains,anil deshmukh ,மகாராஷ்டிரா,புலம்பெயா்ந்த தொழிலாளர்கள்,ஷார்மிக் சிறப்பு ரெயில்கள்,அனில் தேஷ்முக்

மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 374 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கா்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு முறையே 169, 33, 30, 6, 13 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல ராஜஸ்தானுக்கு 15 ரெயில்களும், மேற்கு வங்கத்துக்கு 33 ரெயில்களும், சத்தீஸ்கருக்கு 6 ரெயில்களும் சென்று உள்ளன.

இந்த ரெயில்கள் மும்பை சி.எஸ்.எம்.டி., எல்.டி.டி., பன்வெல், போரிவிலி, பாந்திரா டெர்மினஸ், தானே, புனே, அவுரங்காபாத், கோலாப்பூர், நாக்பூரில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளன. இந்த ரெயில்களில் மொத்தம் 9.82 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்று உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :