Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் புதிதாக 69,878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 69,878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

By: Monisha Sat, 22 Aug 2020 11:23:59 AM

இந்தியாவில் புதிதாக 69,878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69,878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 29,75,702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 945 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55794 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,infection,treatment,kills ,இந்தியா,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,58,947-ல் இருந்து 22,22,578 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,97,330 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொரோனா பரிசோதனைகள் நடந்து உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு மராட்டியம் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகியவை உள்ளன.

Tags :
|