Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்புதியதாக 699 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்புதியதாக 699 பேருக்கு கொரோனா

By: vaithegi Tue, 21 Mar 2023 4:18:27 PM

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்புதியதாக  699 பேருக்கு கொரோனா

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 699 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6,559 ஆக பதிவாகியுள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

இதனை அடுத்து இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,808 ஆக உள்ளது.இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,59,617 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை மட்டும் 220,65,13,507 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,463 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags :
|