Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம்

அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம்

By: vaithegi Mon, 10 Apr 2023 11:19:23 AM

அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம்

அந்தமான் : அந்தமான் – நிகோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து 6-வது முறையாக நிலநடுக்கம் ... அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6-வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதனை அடுத்து இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு ஆகியுள்ளது.

earthquake,andaman,nicobar ,நிலநடுக்கம்,அந்தமான் ,நிகோபார்

இதற்கு முன்னதாக, நேற்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்குள் 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 3 மணியளவில் நிலநடுக்கம் அளவுகோலில் 4.1 ரிக்டர் ஆக பதிவாக, அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதன் பின்னர், 4.9, 3.9, 5.5 என அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவு செயப்பட்டுள்ளது. இதனை அடுத்து இது அந்தமான் – நிகோபார் தீவுகளில் இருக்கும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :