Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Tue, 27 Oct 2020 12:57:05 PM

பாகிஸ்தானில் மத பாடசாலையில் குண்டு வெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துவா என்ற மாகாணத்தின் பெஷாவர் நகரில் உள்ள டிர் காலனியில் ஸ்பன் ஜமாத் என்ற மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதியில் மத கருத்துக்களை கற்றுகொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் டிர் காலனி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மத கல்வி கற்று வந்தனர்.

இந்நிலையில், அந்த மதபாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மதகல்வி பயின்று வந்தனர். அப்போது காலை 8.30 மணியளவில் மதகல்வி கற்றுக்கொடுத்துவந்த மசூதியின் மையப்பகுதியில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.

7 killed,blast,religious school,pakistan ,7 பேர் உயிரிழப்பு , குண்டுவெடிப்பு, மத பள்ளி, பாகிஸ்தான்

குண்டுவெடிப்பு சம்பவத்தால் சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து மசூதி கட்டிடத்தை விட்டு வெளியே தப்பியோடினர். இருப்பினும், இந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 70-க்கும் அதிகமான சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|