Advertisement

சீனாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி

By: Nagaraj Mon, 28 Dec 2020 09:37:54 AM

சீனாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 7 பேர் பலி

கத்திக் குத்து தாக்குதல்... சீனாவில் நடத்தப்பட்ட சரமாரி கத்திக் குத்து தாக்குதலில் 7 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

லியாவ்னிங் மாகாணம், கையுவான் நகரில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா். அவரைக் கைது செய்ய முயன்ற காவலா் உள்பட மேலும் 7 போ் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனா். எனினும், அவா்களை உடல் நிலை குறித்து உடனடி தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினா்.

civilians,assault,stabbing,schoolchildren ,பொதுமக்கள், தாக்குதல், கத்திக்குத்து, பள்ளிச்சிறுவர்கள்

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனாவில் குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் குறைவாகவே இருந்தாலும், அண்மைக் காலமாக கத்திக் குத்து சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு உள்ளானவா்கள் பள்ளிச் சிறுவா்கள், பொதுமக்கள் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனா்.

Tags :