Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் 7 லட்சம் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்கள்

பாகிஸ்தானில் 7 லட்சம் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்கள்

By: Monisha Tue, 14 June 2022 1:53:59 PM

பாகிஸ்தானில் 7 லட்சம் குழந்தைகள் கொத்தடிமை தொழிலாளர்கள்

சிந்த் : உலகின் பல்வேறு நாடுகளில் கொத்தடிமை தொழிலாளர்களாக மனிதர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு எதிரான கடுமையான சட்டமும் அமலில் உள்ளது. தற்போது, பாகிஸ்தானின் ஹாரி நல கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசு சாரா அமைப்பு ஒன்று வெளியிட்டு உள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில், பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் 17 லட்சம் பேர் கொத்தடிமை கூலிகளாக உள்ளனர். அவர்களில் 7 லட்சம் பேர் குழந்தைகள் என்று தெரிவித்துள்ளது. இவ்வாறு கொத்தடிமை கூலிகளாக வைக்கப்படும் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களை அனுபவிக்கின்றனர்.

7-lakh children,bondage,laborer,pakistan,slavery ,7 லட்சம் குழந்தைகள், கொத்தடிமைகள், தொழிலாளிகள், பாகிஸ்தான், அடிமைத்தனம்

குழந்தைகளை கொத்தடிமை கூலிகளாக கட்டுக்குள் வைத்திருக்கும் நிலச்சுவான்தாரர்கள், மனிதநேயமற்ற, முறையற்ற வகையிலான பாலியல் துன்புறுத்தல் உள்பட பல்வேறு வாழ்வதற்கு சிக்கலான இரக்கமற்ற முறையில் நடந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் 64 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. அவர்களில் பலர் குழந்தை தொழிலாளர்களாக வேலை செய்யும் அவல நிலை காணப்படுவதாக டான் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

Tags :