Advertisement

அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

By: Karunakaran Wed, 22 July 2020 4:17:01 PM

அலாஸ்காவில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். இந்த கொரோனா காலத்திலும் பல நாடுகளில் இயற்கை பேரிடர்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். கனமழை, நிலநடுக்கம், வெள்ளம் போன்றவற்றால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அலாஸ்கா சிக்னிக்கில் இருந்து தெற்கே 75 மைல் தூரத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், தெற்கு நகரமான சிக்னிக்கில் இருந்து 75 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

alaska,earthquake,tsunami,shake ,அலாஸ்கா, பூகம்பம், சுனாமி,அதிர்வு

இந்த நிலநடுக்கம் காரணமாக அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்கா கடற்கரையின் தெற்குப்பகுதி, அலெயுடியன் தீவுகளுக்கு அமெரிக்க தேசிய டி-சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.எம்.டி. நேரப்படி இந்த நிலநடுக்கம் 6.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|