Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்

கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்

By: Karunakaran Fri, 31 July 2020 5:51:08 PM

கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளானவர்கள்.

அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டபின்பே, மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலோம்பே நகரில் மட்டும் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 thousand students,pregnant,corona virus,curfew ,7 ஆயிரம் மாணவர்கள், கர்ப்பிணி, கொரோனா வைரஸ், ஊரடங்கு உத்தரவு

இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊர்டங்கின் போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக கென்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 150,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டதாகவும், உலகின் மிக அதிகமான சிறுமிகள் கர்ப்ப விகிதங்களில் கென்யாவும் ஒன்றாகும்.


Tags :