Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடைசி நாளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த 70 லட்சம் பேர்

கடைசி நாளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த 70 லட்சம் பேர்

By: Nagaraj Mon, 01 Aug 2022 3:51:35 PM

கடைசி நாளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்த 70 லட்சம் பேர்

புதுடில்லி: ஒரே நாளில் 70 லட்சம் பேர்... வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி தினம் என்பதால் ஒரே ஒரே நாளில் 70 லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

நடப்பு நிதியாண்டிற்கான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31ஆம் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் கடைசி ஒவ்வொரு மணி நேரத்திலும் 5 லட்சம் பேர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

last day,income tax,account,late fee,annual return ,கடைசி நாள், வருமானவரி, கணக்கு, தாமத கட்டணம், ஆண்டு வருமானம்

மேலும் இதுவரை 6 கோடிக்கும் அதிகமானோர் தங்களுடைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனியும் 2022-2023ம் ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய முடியும்.

ஆனால், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமதக் கட்டணம் (அபராதம்) ரூ.5,000, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமதக் கட்டணம் ரூ.1,000 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :