Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வார இறுதி நாள், ஓணம் பண்டிகை முன்னிட்டு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள், ஓணம் பண்டிகை முன்னிட்டு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

By: vaithegi Fri, 25 Aug 2023 1:14:48 PM

வார இறுதி நாள், ஓணம் பண்டிகை முன்னிட்டு 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: 70 சிறப்பு பேருந்துகள் இயக்கம் ... தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை காலங்களில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் மிகவும் அலைமோதும்.

இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு அரசு இத்தகைய நாட்களில் மக்கள் தேவையை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கிலும் அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி கொண்டு வருகிறது.

special buses,weekends,onam festival ,சிறப்பு பேருந்துகள்,வார இறுதி நாள், ஓணம் பண்டிகை

அந்த வகையில் வருகிற 26, 27,29 ஆகிய தேதிகளில் வார இறுதி நாட்கள் மற்றும் ஓணம் பண்டிகை, சுப முகூர்த்த நாட்கள் ஆகியவை காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணிப்பர்.

இதனையடுத்து மேற்கண்ட தேதிகளில் மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை ஆகிய பகுதிகளுக்கு சுமார் 70 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துஉள்ளது.

Tags :