Advertisement

பிரேசிலில் கொரோனாவுக்கு இதுவரை 72 ஆயிரத்து 950 பேர் பலி

By: Monisha Wed, 15 July 2020 12:07:19 PM

பிரேசிலில் கொரோனாவுக்கு இதுவரை 72 ஆயிரத்து 950 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.33 கோடியை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5.78 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் பிரேசில் இருந்து வருகிறது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20 ஆயிரத்து 286 பேர் கொரோனா நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

corona virus,brazil,death toll,vulnerability,testing ,கொரோனா வைரஸ்,பிரேசில்,பலி எண்ணிக்கை,பாதிப்பு,பரிசோதனை

தற்போது பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 88 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பிரேசிலில் கொரோனாவுக்கு இதுவரை 72 ஆயிரத்து 950 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் கொரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.

Tags :
|