Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் திட்டம் ... 42 நாட்களில் மட்டும் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் திட்டம் ... 42 நாட்களில் மட்டும் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

By: vaithegi Sat, 27 Aug 2022 09:03:42 AM

75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் திட்டம்  ...  42 நாட்களில் மட்டும் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

இந்தியா : நாட்டில் 65 வயதை தாண்டியவர்களுக்கும், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்தது. இந்நிலையில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இந்த திட்டம், செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். இதற்காக நாடு முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு கொண்டு வருகிறது.

booster vaccine,free , பூஸ்டர் தடுப்பூசி ,இலவசம்

இதை அடுத்து இந்த திட்டம் தொடங்கி, நேற்று 42-வது நாள் ஆகும். இந்த 42 நாட்களில் மட்டும் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 14 கோடியே 70 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது.

மேலும் அது சராசரியாக 27 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதுபோன்று நாள் ஒன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது. விழிப்புணர்வு பிரசாரத்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

பிரதமர் மோடியின் உறுதியான, முற்போக்கான தலைமையின் கீழ் நாட்டின் கூட்டு மனஉறுதியை இது காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Tags :