Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 75 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 75 பேர் உயிரிழப்பு

By: Monisha Mon, 10 Aug 2020 4:47:32 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 75 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,646 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் தற்போது 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதிதாக 5 ஆயிரத்து 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

ramanathapuram district,corona virus,infection,death,treatment ,ராமநாதபுரம் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,585 ஆக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மொத்தம் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,646 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 47 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 150 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போதைய நிலையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் கோவிட் கேர் மையங்களில் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|