Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அலாஸ்காவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

அலாஸ்காவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

By: Nagaraj Tue, 20 Oct 2020 3:37:52 PM

அலாஸ்காவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

சுனாமி எச்சரிக்கை... அலாஸ்காவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், அங்கு சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்காவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அலாஸ்கா கடற்கரை பகுதியில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

earthquake,tsunami alert,alaska,evacuation ,நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை, அலாஸ்கா, மக்கள் வெளியேற்றம்

சில இடங்களில் 1.5 முதல் 2 அடி உயர சுனாமி அலைகளும் ஏற்பட்டன. இதுகுறித்து தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வௌியிட்ட அறிக்கையில், ‘இன்று ஏற்பட்ட நிலநடுக்கம், சாண்ட் பாயிண்ட் நகரிலிருந்து 94 கி.மீ தூரத்திற்கும், 41 கி.மீ. தூரத்தில் உள்ள கென்னடி நுழைவாயிலிலிருந்து யுனிமாக் வரை சுனாமி எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மாலை 5 மணியளவில் 7.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இன்றும் வரவில்லை. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளிேயற்றப்பட்டு வருகின்றனர்’ என்று தெரிவித்துள்ளது. மேலும், அலாஸ்கா நிலநடுக்க மையத்தின் கூற்றுப்படி, ‘அலாஸ்கா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவில் 5க்கும் அதிகமான அளவில் காட்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அலாஸ்கா மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|