உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 75 பேர் மீட்பு
By: Nagaraj Sat, 08 July 2023 3:44:00 PM
ஈக்வடார்: உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஈக்வடாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்குவடாரில் மிக உயரமான சுற்றுலா கேபிள் கார்களில் சிக்கிய 75 பயணிகள் 10 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3100 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதியில் இரண்டரை கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய கேபிள் கார்கள் பழுதாகி அந்தரத்தில் நின்று விட்டன.
காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட மீட்புக் குழுவினர் உயரத்தில் சிக்கியிருந்த 48 பேர் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டு தரைக்குக் கொண்டு வந்தனர்.
Tags :
police |