Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் இன்று 77,266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் இன்று 77,266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Fri, 28 Aug 2020 1:42:34 PM

இந்தியாவில் இன்று 77,266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி

உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களாக ஆகியும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் தினமும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகளையும், மரணங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்தியாவில் இன்று 77,266 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 77,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 7 லட்சத்து 42 ஆயிரத்து 023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona viruse,india,corona prevalence,corona death ,கொரோனா வைரஸ், இந்தியா, கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 60,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,057 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 61,529 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று 9,01,338 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதனால் நாடு முழுவதும் 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

Tags :
|