Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மாவட்ட வாரியாக வெளியான தகவல்

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மாவட்ட வாரியாக வெளியான தகவல்

By: Monisha Fri, 22 May 2020 10:07:17 AM

தமிழகத்தில் புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி - மாவட்ட வாரியாக வெளியான தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 2-ம் இடத்தில உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 967 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் இதில் அடங்குவர். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 61 பேர் விமான நிலையத்திலும், 5 பேர் ரெயில் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,district wisereport,new infection ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,மாவட்ட வாரியாக,புதிய தொற்று

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 7
செங்கல்பட்டு - 416
சென்னை - 5,681
கடலூர் - 19
தர்மபுரி - 1
திண்டுக்கல் - 25
கள்ளக்குறிச்சி - 62
காஞ்சிபுரம் - 106
கன்னியாகுமரி - 25
கரூர் - 25
கிருஷ்ணகிரி - 3
மதுரை - 80
நாகப்பட்டினம் - 6
நீலகிரி - 2
பெரம்பலூர் - 26
புதுக்கோட்டை - 8
ராமநாதபுரம் - 17
ராணிப்பேட்டை - 28
சேலம் - 14
சிவகங்கை - 16
தென்காசி - 33
தஞ்சாவூர் - 14
தேனி - 51
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 413
திருவண்ணாமலை - 109
தூத்துக்குடி - 104
திருநெல்வேலி - 164
திருச்சி - 2
வேலூர் - 6
விழுப்புரம் - 26
விருதுநகர் - 29
மொத்தம் - 7,588

Tags :