Advertisement

தேனியில் இன்று ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு உறுதி

By: Monisha Fri, 11 Sept 2020 09:42:33 AM

தேனியில் இன்று ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு உறுதி

தேனியில் ஏற்கனவே 13,520 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 052 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது.

theni district,corona virus,infection,death,treatment ,தேனி மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

அதிகபட்சமாக சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையை தொடர்ந்து தென் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் தேனியில் ஒரே நாளில் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனியில் ஏற்கனவே 13,520 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று ஒரே நாளில் 78 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,598 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 12,562 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|