Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழில் அதிபரிடம் கடன் கேட்டு 7.87 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

தொழில் அதிபரிடம் கடன் கேட்டு 7.87 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

By: Monisha Fri, 16 Oct 2020 4:26:21 PM

தொழில் அதிபரிடம் கடன் கேட்டு 7.87 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்கு

திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் நவநீதகிருஷ்ணன் (வயது 39). இவர் கருவம்பாளையம் பகுதியில் பனியன் எலாஸ்டிக் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். செட்டிபாளையத்தை சேர்ந்த ஜெயராமன் அவரது மனைவி இந்துராணி மற்றும் சுமதி ஆகியோர் நவநீதகிருஷ்ணனின் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் தொழில் காரணமாக ஜெயராமன், இந்துராணி, சுமதி ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நவநீதகிருஷ்ணனிடம் ரூ.10 லட்சம் கடன் கேட்டுள்ளனர்.

கடன் தொகையை 6 மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய நவநீதகிருஷ்ணன் தனது மனைவியின் நகையை அனுப்பர்பாளையத்தில் உள்ள கோவை மாவட்ட கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்தை ஜெயராமன், இந்துராணி, சுமதி ஆகியோர் வங்கி கணக்கில் செலுத்தினார்.

business man,credit,fraud,case,investigation ,தொழில் அதிபர்,கடன்,மோசடி,வழக்கு,விசாரணை

அதன் பிறகு அவர்கள் கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அங்கேரிபாளையத்தில் வைத்து ஜெயராமனிடம் நவநீத கிருஷ்ணன் தனது பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டார். அதற்கு அவர் பணத்தை கொடுக்க மறுத்து திட்டியதாக தெரிகிறது.

இது குறித்து நவநீதகிருஷ்ணன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஜெயராமன், அவரது மனைவி இந்துராணி மற்றும் சுமதி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags :
|
|
|