Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர் மழை காரணமாக கோழி பண்ணைகளில் 8 கோடி முட்டைகள் தேக்கம்

தொடர் மழை காரணமாக கோழி பண்ணைகளில் 8 கோடி முட்டைகள் தேக்கம்

By: Monisha Tue, 08 Dec 2020 1:34:23 PM

தொடர் மழை காரணமாக கோழி பண்ணைகளில் 8 கோடி முட்டைகள் தேக்கம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் உள்ள ஐந்து கோடி கோழிகள் மூலம் தினமும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த 21-ந் தேதி 475 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை மூன்று நாட்களில் 50 காசுகள் குறைக்கப்பட்டது.

இதையடுத்து 26-ந் தேதி 15 காசு உயர்த்தப்பட்டு 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் கடந்த 5-ந் தேதி 20 காசுகள், நேற்று 20 காசுகள் என 2 நாட்களில் 40 காசுகள் சரிந்து முட்டை கொள்முதல் விலை 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. பண்ணைகளில் முட்டை தேக்கம் அடைந்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

rain,traffic,difficulty,eggs,stagnation ,மழை,போக்குவரத்துக்கு,சிரமம்,முட்டைகள்,தேக்கம்

இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:- வடமாநிலங்களுக்கு வழக்கமாக தினமும் 50 லட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. தற்போது தொடர் மழை காரணமாக 20 லட்சமாக குறைந்துள்ளது. மேலும் தமிழகத்தில் புயல் மழை காரணமாக வாகனங்கள் இயக்குவது தடைபட்டுள்ளது.

அதனால் முட்டைகளை சரியாக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ணைகளில் 2 நாட்களாக எட்டு கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அவற்றை கருத்தில் கொண்டு முட்டை கொள்முதல் விலையை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வர உள்ளதால் கேக் தயாரிப்பதற்கு முட்டை அதிக அளவில் தேவைப்படும். அதே போல வட மாநிலங்களுக்கு முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளதால் கூடுதலாக முட்டையை அனுப்ப கேட்டுள்ளனர். அதனால் இன்னும் ஒரு வாரத்தில் முட்டை கொள்முதல் விலை உயரும் என அவர் கூறினார்.

Tags :
|
|