Advertisement

கோவையில் 8 இன்ச் நீளமுள்ள அதிசய கோழி முட்டை

By: Nagaraj Tue, 03 Jan 2023 5:13:00 PM

கோவையில் 8 இன்ச் நீளமுள்ள அதிசய கோழி முட்டை

கோவை: கோவையில் 8 இன்ச் நீளமுள்ள அதிசய கோழி முட்டை கின்னஸ் சாதனை புத்தகத்திற்கு அனுப்பப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கோவை கோவில்பாளையம் குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ பி காலனியை சேர்ந்தவர் அபு (40). இவரது மனைவி சியாமளா (34). அபு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சியாமளா வீட்டில் இருந்தே மரச்செக்கு ஆயில் தயாரிக்கும் சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த மரச்செக்கு ஆயுள் எடுத்தது போக மீதம் கிடைக்கும் புண்ணாக்குகளை வைத்து என்ன செய்வது என்பதை யோசித்தபோது கோழிக்கு உணவாக கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் கோழி வளர்ப்பில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை இவர் வீட்டிலே வளர்த்து வருகிறார் இதனால் நாள் ஒன்றுக்கு 8 முதல் 10முட்டைகள் இடுவதும். இந்த முட்டைகளை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு விற்பனையும் செய்து வருகிறார்.

egg,guinness world record,effort,big size ,முட்டை, கின்னஸ் சாதனை, முயற்சி, பெரியஅளவு

தற்போது இவரது வீட்டில் உள்ள கோழி நேற்று ஒரு முட்டையிட்டு இருக்கிறது அந்த முட்டை சாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.


இது குறித்து அவர் சமூக வலைதளங்களில் முட்டையின் அளவு குறித்து அவர் ஆராய்ந்து பார்த்தபோது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முட்டையின் அளவு 10 இன்ச் அதன் சுற்றளவு 5 இன்ச் அளவும், அதன் எடை 132 கிராம் கொண்டதாக இருந்தது.

ஆனால் சியாமளாவின் கோழி இட்ட முட்டை உயரத்தில் 8.1 இன்ச் அளவும் 90 கிராம் எடையும் கொண்டதாக இருந்தாலும் கூட சுற்றளவில் உலக கின்னஸ் சாதனையில் இடம் பெற்ற முட்டையை காட்டிலும் புள்ளி 5 இன்ச் அளவு அதிகமாக இருப்பதினால் இவர் தற்போது இந்த முட்டையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், இந்த முட்டையை தமிழக முதல்வர் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்த முட்டையை பரிசளிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

Tags :
|
|