Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 8 கோடி பேர் புலம் பெயர்ந்துள்ளனர்; ஐ.நா. கவலை தெரிவிக்கிறது

8 கோடி பேர் புலம் பெயர்ந்துள்ளனர்; ஐ.நா. கவலை தெரிவிக்கிறது

By: Nagaraj Thu, 18 June 2020 8:37:20 PM

8 கோடி பேர் புலம் பெயர்ந்துள்ளனர்; ஐ.நா. கவலை தெரிவிக்கிறது

8 கோடி பேர் புலம் பெயர்ந்துள்ளனர்... உலகளவில் வரலாறு காணாத அளவு கடந்த ஆண்டு ஏறத்தாழ 8 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

போர் மற்றும் இடர்பாடுகள் காரணமாக முந்தைய ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு 90 லட்சம் பேர் கூடுதலாக புலம் பெயர்ந்துள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. முகமை தெரிவித்துள்ளது.

canada,resettled country,8 million people,myanmar ,கனடா, மீள் குடியேற்ற நாடு, 8 கோடி பேர், மியான்மர்

அதாவது உலக மனித வளத்தில் ஒரு சதவீதம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு புலம் பெயர்ந்துள்ளதாகவும் இந்த பட்டியலில் சிரியா, வெனிசுலா, ஆப்கானிஸ்தான், தெற்கு சூடான், மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் முதன்மை வகிப்பதாகவும் ஐ.நா. உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய மீள்குடியேற்ற நாடுகள் (resettlement) பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி, கனடா முதலிடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags :
|