Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குவைத்தில் குடியேறிகள் ஒதுக்கீட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம்

குவைத்தில் குடியேறிகள் ஒதுக்கீட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம்

By: Karunakaran Tue, 07 July 2020 3:08:30 PM

குவைத்தில் குடியேறிகள் ஒதுக்கீட்டு மசோதாவால் 8 லட்சம் இந்தியர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம்

அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் பெரும்பாலோனோர் வெளிநாடுகளில் இருந்து சென்று குடியேறியவர்களே ஆவர். அங்கு மொத்தமுள்ள 43 லட்சம் மக்கள் தொகையில், சுமார் 13 லட்சம் மட்டுமே குவைத்தியர்கள் ஆவர். மற்ற அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். குவைத்தில் வாழும் வெளிநாட்டினரில் பெரும்பாலோனோர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இங்கு சுமார் 14.5 லட்சம் இந்தியர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். தற்போது, கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொரோனா தொற்று காரணமாக அங்குள்ள அரசு மற்றும் மக்களிடம் வெளிநாட்டினருக்கு எதிரான மனநிலை அதிகரித்துள்ளது. வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

indian,kuwait,appropriation bill,forced to leave ,இந்தியன், குவைத், ஒதுக்கீட்டு மசோதா,  கட்டாயம்

இந்நிலையில் தங்கள் நாட்டில் வாழும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை 70 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக குறைக்க பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா கடந்த மாதம் பரிந்துரை ஒன்றை வழங்கினார். இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற சட்டம் மற்றும் சட்டமன்றக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின்படி குவைத்தின் மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறையாகும்.

இதனால் தற்போது 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து குவைத் நாடாளுமன்ற சபாநாயகர் மார்சவுக் அல் கனேம் பேட்டி அளித்தபோது, குவைத்தின் மக்கள் தொகை கட்டமைப்பில் 70 சதவீதத்தினர் வெளிநாட்டினர். இந்த வெளிநாட்டினரில் 13 லட்சம் பேர் படிப்பறிவில்லாதவர் அல்லது வெறும் எழுதப்படிக்கத்தெரிந்தவர். இப்படிப்பட்டவர்களை குவைத் விரும்பவில்லை என்று கூறினார்.

Tags :
|
|