Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மிக மோசமான சூறாவளியால் பாதுகாப்பு கருதி 8 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

மிக மோசமான சூறாவளியால் பாதுகாப்பு கருதி 8 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

By: Nagaraj Wed, 21 Sept 2022 10:38:01 AM

மிக மோசமான சூறாவளியால் பாதுகாப்பு கருதி 8 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

ஜப்பான்: பாதுகாப்பு கருதி 8 மில்லியன் மக்கள் வெளியேற்றம்... ஜப்பான் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக மோசமான சூறாவளியை எதிர்கொண்டு வருகிறது. இதனையடுத்து 8 மில்லியனுக்கும் மேலான மக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்மடோல் என பெயரிடப்பட்டுள்ள குறித்த சூறாவளியால் இதுவரை இரண்டு பேர் மரணமடைந்துள்ளதுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

flights,cancellations,domestic,storms,japan,electricity ,விமானங்கள், ரத்து, உள்நாடு, புயல் தாக்கியது, ஜப்பான், மின்சாரம்

கியூஷுவின் சில பகுதிகளில் வார இறுதி முழுவதும் 20 அங்குலத்திற்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு அவசரகால முகாம்களில் கழித்தனர்.

கிட்டத்தட்ட 350,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் உள்ளன. மட்டுமின்றி, கியூஷு பகுதியின் முழு புல்லட் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது, நூற்றுக்கணக்கான உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Tags :
|
|